கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த ஜவுளிக்கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்


கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த ஜவுளிக்கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 6 May 2021 6:58 PM GMT (Updated: 6 May 2021 6:58 PM GMT)

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த ஜவுளிக்கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

வேலூர்

வேலூரில் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெரிய நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தன. 

கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா? என நேற்று மாநகராட்சி கமிஷனர் தலைமையில் 2-வது மண்டலத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சைதாப்பேட்டை காந்திரோடு, பேரி சுப்பிரமணிய சாமி கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, மெயின்பஜார் போன்ற இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. 

பேரி சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட ஒரு ஜவுளிக்கடை திறந்து அங்கு வணிகம் நடந்து கொண்டிருந்தது. இதனால் அந்த ஜவுளிக்கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். பின்னர் கடை மூடப்பட்டது.
இதேபோல சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது, முகக் கவசம் அணியாதது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்திருந்தது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Next Story