தெப்பக்குளத்தில் மூழ்கி யானை பாகன் சாவு


தெப்பக்குளத்தில் மூழ்கி யானை பாகன் சாவு
x
தினத்தந்தி 6 May 2021 7:07 PM GMT (Updated: 2021-05-07T00:37:14+05:30)

காளையார்கோவிலில் தெப்பக்குளத்தில் மூழ்கி யானை பாகன் இறந்தார்.

காளையார்கோவில்,
திருப்பத்தூர் வைரவன் கோவில் யானை பாகனாக பணிபுரிந்து வந்தவர் சரவணன் (வயது 32). இவர் தனது நண்பர்களுடன் காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் யானை பாகனை பார்க்க வந்தார். பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் அங்குள்ள தெப்பக்குளத்தில் இறங்கி குளித்தார். தெப்பக்குளத்தில் உள்ள மைய மண்டபத்துக்கு நீச்சல் அடித்து கொண்டு சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. நீரில் மூழ்கி விட்டார். இதை பார்த்து பதறி போன நண்பர்கள் இது குறித்து காளையார்கோவில் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு இறந்த நிலையில் சரவணன் உடலை மீட்டனர். அதன்பிறகு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story