பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 May 2021 7:15 PM GMT (Updated: 2021-05-07T00:45:26+05:30)

மேற்கு வங்காள சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பரங்குன்றம்,மே.
மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் திருப்பரங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சசி ராமன், துறைத்தலைவர்கள் ஹரிஹரன்ராஜா, சந்திரன், ஹார்விபட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story