வணிக நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்பட்டன


வணிக நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்பட்டன
x
தினத்தந்தி 6 May 2021 7:48 PM GMT (Updated: 6 May 2021 7:48 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் அரசின் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

விருதுநகர், 
மாவட்டத்தில் அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்த நிலையில் மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பஸ்கள் ஓடினாலும் கூட்டம் இல்லாததால் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. 
கட்டுப்பாடுகள் 
தமிழக அரசு கொரோனாபரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
அதிலும் முக்கியமாக அனைத்து பகுதிகளிலும் மளிகை, காய்கறி மற்றும் டீக்கடைகள் மதியம் 12 மணி வரைமட்டுமே செயல்பட வேண்டும் என்றும் மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பஸ்களில் 50 சதவீதபயணிகளுடன் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 
மருந்து கடைகள் 
மாவட்டத்தை பொறுத்தமட்டில் அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பலசரக்கு காய்கறி மற்றும் டீக்கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை செயல்பட்டது.
 இதனால் காய்கறி மற்றும் பலசரக்குகடைகளிலும் காலையில் பொதுமக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்குவதை காணமுடிந்தது. விருதுநகர் மெயின் பஜார் பொருத்தமட்டில் பஜார் முழுவதும் உள்ள பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக காலையிலேயே பெண்கள் அதிக அளவில் மார்க்கெட்டுக்கு. வந்திருந்தனர். மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
 கூட்டம் இல்லை 
புறநகர் பஸ்களும், டவுன் பஸ்களும் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளநிலையில் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன.
 ஆனால் பஸ்களில் கூட்டம் இல்லை. அதிகாலையில் விருதுநகரில் இருந்து புறப்பட்ட மதுரை பஸ்களில் ஒருசில பயணிகள் சென்ற நிலையில் பஸ்கள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களிலும் கூட்டம் இல்லாத நிலையில் போக்குவரத்துக்கு கழகத்திற்கும் வசூல் பாதிப்பு ஏற்பட்டது.  
பாதிப்பு 
ெரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் மிக குறைவாகவே பயணித்ததால் ரெயில்நிலைய ஆட்டோக்களும் வழக்கம்போல இயக்கப்படவில்லை. 
நகர்ப்புறங்களில் வணிக நிறுவனங்கள் செயல்பட்டால்தான் கிராமப்புறங்களிலிருந்து கிராம மக்கள் வேலைக்கு வரும் நிலை ஏற்படும்.  நகர்புறங்களில் கூலி தொழிலாளர்கள் வணிகநிறுவனங்களை சார்ந்து தங்கள் பிழைப்பை நடத்தி வரும் நிலையில் வணிக நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்ட நிலையில் கிராம மக்களும், நகர்ப்புறங்களில் கூலி தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.
அரசு அலுவலகங்கள்
 அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வரவில்லை.
 அரசு விதிமுறைப்படி 50 சதவீத பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் செயல்பட்டன. வங்கிகளில் வேலை நேரம் குறைக்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர் கூட்டம் சமூக இடைவெளி இல்லாமல் அதிகமாக இருப்பதை காணமுடிந்தது. வங்கி நிர்வாகம் இதனை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்படுவதை கண்காணிக்கும் பணியில் போலீசார் முற்றிலுமாக ஈடுபட்டனர்.
 தமிழக அரசு இதுவரை மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது அந்த நடைமுறையை மாற்றி ஐ.பி.எஸ். அதிகாரி கண்காணிப்பு அதிகாரிகளாகநியமிக்கப்பட்டுள்ளார். 
வலியுறுத்தல் 
 போலீசார் மாவட்டம் முழுவதும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தும் பணியில் முற்றிலுமாக ஈடுபட்டனர். ஆனாலும் சில பகுதிகளில் விதிகளுக்கு முரணாக செயல்படும் நிலையும் இருந்தது. 
பத்திரிக்கை வினியோகத்திற்கு தடை ஏதுமில்லை என அரசு அறிவித்துள்ள நிலையில் போலீசார் பத்திரிகை வினியோகத்திற்கு அனுமதி மறுக்கும் நிலை ஏற்பட்டது. எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு இதுகுறித்து முறையான அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் கொேரானாவின் வேகத்தை உணர்ந்த மாவட்ட மக்கள் அரசு அறிவித்துள்ள கூடுதல் கட்டுப்பாடுகளை அவர்கள் கடைபிடிக்கும் மன நிலைக்கு வந்து விட்டனர்.
சாத்தூர் 
 சாத்தூரில் தமிழக அரசின் உத்தரவை மீறி ஜவுளி கடைகள், பாத்திர கடை, செல்ேபான் கடைகள் என எண்ணற்ற கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. 
இந்த நிலையில் விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார ஆய்வாளர் குமார், திருப்பதி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசின் உத்தரவை மீறி திறந்து இருந்த கடைகளை மூட உத்தரவிட்டனர். இதையடுத்து மதியம் 12 மணிக்கு மேல் மெடிக்கல் மற்றும் ஓட்டல்களை தவிர அனைத்துக்கடைகளும் மூடப்பட்டதை அடுத்து கடைவீதிகளும் முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ராஜபாளையம், சிவகாசி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. 


Next Story