ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 590 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 590 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 May 2021 9:27 PM GMT (Updated: 6 May 2021 9:29 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 590 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 590 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

590 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
3,421 பேர் சிகிச்சை
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 599 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 21 ஆயிரத்து 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 168 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 421 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story