டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது வழக்குப்பதிவு


டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 7 May 2021 5:22 AM GMT (Updated: 2021-05-07T10:52:10+05:30)

டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நகைச்சுவை நடிகர் வீடியோ

நகைச்சுவை நடிகர் சுனில் பால் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர்களை பற்றி இழிவாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அந்த நடிகர், "டாக்டர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். ஆனால் இதில் 90 சதவீதம் பேர் சாத்தான்களாகவும், ஏமாற்றுக்காரர்களாக மாறிவிட்டனர். கொரோனாவால் ஏழை மக்கள் நாள் முழுவதும் அச்சத்திலேயே உள்ளனர். படுக்கை இல்லை, பிளாஸ்மா இல்லை, மருந்து இல்லை, அது இல்லை, இது இல்லை என அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர்" என கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு

இந்தநிலையில் நகைச்சுவை நடிகர் டாக்டர்களை இழிவுபடுத்தி உள்ளதாக அந்தேரி போலீஸ் நிலையத்தில் டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் சுஷ்மிதா பட்நகர் புகார் அளித்தார்.அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடிகர் சுனில் பால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story