காரைக்காலில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா


காரைக்காலில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 May 2021 10:42 AM GMT (Updated: 2021-05-07T16:12:48+05:30)

காரைக்காலில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி 962 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 108 ஆக உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 46 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

Next Story