அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை
அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
வால்பாறை,
வால்பாறையில் தொ டர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் கவனமுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வால்பாறை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து ஒலி பெருக்கி மூலமாக பொது மக்களுக்கு அறிவிப்புகளை தினந்தோறும் செய்து வருகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மருத்துவ முகாம்கள் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் கொரோனா பரிசோதனை முகாம்களை நடத்தி வருகின்றனர்.
வால்பாறை பகுதியை பொறுத்தவரை வால்பாறை, முடீஸ், சோலையார் நகர் ஆகிய 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிகள் மூலமாக இதுவரை கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு போட்டுள்ளனர்.
இது வரை 70-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார டாக்டர் பாபு லட்சுமண் தலைமையில் சிறப்பு கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று வால்பாறை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.
வட்டார டாக்டர் பாபுலட்சுமண் கூறுகையில், காய்ச்சல், சளி இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
லேசான அறிகுறிகள் இருப்பதாக உணரக்கூடியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story