பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 7 May 2021 4:13 PM GMT (Updated: 7 May 2021 4:13 PM GMT)

கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

மதுரை,மே.
மதுரை பழங்காநத்தம் ஆர்.சி. தெருவை சோந்தவர் ஜெயசீலன் (வயது 45). இவர் மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டரை பார்த்து விட்டு பை-பாஸ் ரோடு காளவாசல் பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று ஜெயசீலனின் மனைவி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story