திருச்சி என்.ஐ.டி.யில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க இடம் தேர்வு


திருச்சி என்.ஐ.டி.யில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க இடம் தேர்வு
x
தினத்தந்தி 7 May 2021 8:43 PM GMT (Updated: 7 May 2021 8:43 PM GMT)

திருச்சி என்.ஐ.டி.யில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனை தவிர காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி, புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத் தை நேற்று கொரோனா பரவல் தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ரீட்டா ஹரீஸ் தக்கர், கலெக்டர் திவ்யதர்ஷினி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story