ஊழியருக்கு கொரோனா தொற்று: ஸ்ரீரங்கம் தபால் நிலையம் மூடல்


ஊழியருக்கு கொரோனா தொற்று: ஸ்ரீரங்கம் தபால் நிலையம் மூடல்
x

ஊழியருக்கு கொரோனா தொற்று காரணமாக ஸ்ரீரங்கம் தபால் நிலையம் மூடப்பட்டது.

ஸ்ரீரங்கம், 
ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த தபால் நிலையத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் அலுவலகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் நாங்கள் அலுவலகத்திற்குள் சென்று பணியில் ஈடுபடுவோம் என கூறி நேற்று காலை அலுவலகத்தின் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்றனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் தபால் நிலையத்தை 2 நாட்கள் மூட அறிவுறுத்தினர். இதுகுறித்து திருச்சி தலைமை தபால் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களின் அறிவுறுத்தலின்படி ஸ்ரீரங்கம் தபால் நிலையம் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story