ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி


ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 7 May 2021 9:03 PM GMT (Updated: 7 May 2021 9:03 PM GMT)

திண்டுக்கல்லில் ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

 மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், செபஸ்டின் ஆகியோர் மேற்பார்வையில் ரெயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

முன்னதாக ரெயில்வே ஊழியர்களின் பெயர் விவரங்கள், அவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை தடுப்பூசி போடுவதற்காக வந்த மருத்துவ குழுவினர் சேகரித்தனர்.


பின்னர் அவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்ெகாண்டனர். 

அவ்வாறு வரிசையில் நின்ற அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

 பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து மருத்துவ குழுவினர் விளக்கம் அளித்தனர். 

அதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் 45-க்கும் மேற்பட்டோருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடப்பட்டது. 

இதனை ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story