வாடகை கார் டிரைவர்கள் போராட்டம்

வாடகை கார் டிரைவர்கள் போராட்டம்
கோவை
கோவை நகரில் 2,500-க்கும் மேலான வாடகை கார் டிரைவர்கள் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக வாடகை கார்களில் பயணிகள் சவாரி செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே 100-க்கும் மேற்பட்ட கார்களை கோவை வ.உ.சி. மைதானத்தில் நிறுத்தி வாடகை கார் டிரைவர்கள் அமைதி வழி போராட்டம் நடத்தினார்கள்.
இது குறித்து ஒருங்கிணைப்பாளர் சவுந்தர்ராஜன் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற வாகன கடனுக்கான தவணை தொகை (இ.எம்.ஐ) கட்ட முடியாத நிலை உள்ளது.
எனவே தவணை தொகையை செலுத்த காலஅவகாசமும், வட்டிக்குவட்டி வசூலிப்பதை தவிர்க்கவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை கார் டிரைவர்களுக்கு தமிழக அரசு கட்ட ணம் நிர்ணயம் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத் தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர்கள், இது தொடர்பான கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.
Related Tags :
Next Story