எங்களுக்கு பணம் மிச்சம்


எங்களுக்கு பணம் மிச்சம்
x
தினத்தந்தி 8 May 2021 3:26 PM GMT (Updated: 2021-05-08T20:56:21+05:30)

எங்களுக்கு பணம் மிச்சம்

கோவை

அரசுடவுன் பஸ்களில் கட்டணமின்றி பயணிக்க உத்தரவிடப் பட்டு  உள்ளதால் எங் களுக்கு பணம் மிச்சமா கிறது என்று பெண்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

கட்டணமின்றி பயணம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக பதவி ஏற்றார். அவர், அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று உத்தர விட்டார். 

அந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கோவையில் உள்ள நகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி உற்சாகமாக பயணித்தனர். 

ஆண்களிடம் மட்டும் கண்டக்டர்கள் டிக்கெட் வசூலித்தனர். இதற்காக பயண அட்டை உள்பட எந்த ஆவணங்களும் இன்றியும், கட்டணமின்றியும் பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். 

இது குறித்து டவுன் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் கூறியதாவது

மாதம் ரூ.1500 மிச்சமாகும்

கோவையில் உள்ள தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகளில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகிறோம். ஆனாலும் ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. 

பெரும்பாலான பெண்கள் அரசின் டவுன்  பஸ்களிலேயே தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று வருகின்றனர். 

இதற்காக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியது இருந்தது.
இந்த நிலையில் முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின்,டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அறிவித்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

ஒரு நாளைக்கு பஸ் கட்ட ணமாக ரூ.50 வரை செலவானது. அதை ஒரு மாதம் என்று கணக்கிடும் போது எங்களுக்கு ரூ.1500 வரை மிச்சமாகிறது. இதன் மூலம் வேறு அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பு காரணமாக சாதாரண டவுன் பஸ்களில் ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்தனர். இதனால் கூடுதலாக 78 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story