கார் கவிழ்ந்து விபத்து வாலிபர் பலி


கார் கவிழ்ந்து விபத்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 8 May 2021 4:54 PM GMT (Updated: 2021-05-08T22:24:51+05:30)

உளுந்தூர்பேட்டை அருகே கார் கவிழ்ந்து விபத்து வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை

கோவை கே.கே.புதூர் சாய்பாபா நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் மகன் பிரவீன்குமார்(வயது 35). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு சொந்த வேலை காரணமாக காாில் சென்னைக்கு புறப்பட்டார். காரை அதேபகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார்(35) என்பவர் ஓட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீகுமார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். விபத்து பற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய ஸ்ரீகுமாரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்தில் பலியான பிரவீன்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story