குளித்தலை அருகே வாலிபரை தாக்கிய 4 பேர் கைது


குளித்தலை அருகே வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2021 7:40 PM GMT (Updated: 2021-05-09T01:10:17+05:30)

குளித்தலை அருகே வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (22) என்பவருக்கு ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தனக்கு ஊதியத்தை அதிகமாக வாங்கி கொடுக்க வேண்டும் என்று சக்திவேலிடம், பாலாஜி கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த குளித்தலை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பாரத்குமார் (20), குணசேகரன் (21), விஜய் (19) ஆகியோர் பாலாஜியுடன் சேர்ந்து சக்திவேலை திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சக்திவேல் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகராறு குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் பாலாஜி, பாரத்குமார், குணசேகரன், விஜய் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story