ஒரே நாளில் 6 பேரின் உயிரை பறித்த கொரோனா


ஒரே நாளில் 6 பேரின் உயிரை பறித்த கொரோனா
x
தினத்தந்தி 9 May 2021 2:28 AM IST (Updated: 9 May 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் கொரோனா இறப்பு நிகழ்கிறது. 

இந்த நிலையில் பழனியை சேர்ந்த 58 வயது பெண், 40 வயது ஆண், 70 வயது முதியவர், திண்டுக்கல்லை சேர்ந்த 60 வயது மூதாட்டி, 71 வயது முதியவர் மற்றும் நிலக்கோட்டையை சேர்ந்த 50 வயது ஆண் ஆகிய 6 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 


இதனால் அவர்கள் திண்டுக்கல், பழனி, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 6 பேரும் நேற்று இறந்தனர். 

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனால் மொத்த இறப்பு 230 ஆனது.

இதற்கிடையே நேற்று 114 பெண்கள் உள்பட 361 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

இதைத் தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

Next Story