பிரேத பரிசோதனை சான்றிதழ் தர தாமதம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


பிரேத பரிசோதனை சான்றிதழ் தர தாமதம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 9 May 2021 3:59 AM IST (Updated: 9 May 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

பிரேத பரிசோதனை சான்றிதழ் தர தாமதம் ஆனதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது 54). இவர் விநாயகபுரம் பகுதியில் நடந்து சென்ற போது அரசு பஸ் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

வசந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான சான்றிதழை அவரது மகனான ஆட்டோ டிரைவர் தான்தோன்றிக்கு 5 நாட்களுக்கும் மேலாக தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story