திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,768 பேர் பாதிப்பு 16 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்,
தமிழகத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இருப்பினும் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. கடந்த 6 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது.
16 பேர் பலி
இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொரோனா வைரசால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 768 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 71 ஆயிரத்து 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 62 ஆயிரத்து 523 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 7 ஆயிரத்து 749 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 896 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 16 பேர் இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story