திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,008 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்,
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் பெரும் பாதிப்பையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 24-ந்தேதி வரை இரண்டு வாரம் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.
இருப்பினும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்த ஷபிபவர் (வயது 34) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
8 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஆயிரத்து 8 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 72 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 63 ஆயிரத்து 104 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 8 ஆயிரத்து 182 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 904 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 8 பேர் இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story