சென்னை சாலையோரம் நடைபாதையில் படுத்து இருந்தார்: தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் பலி


சென்னை சாலையோரம் நடைபாதையில் படுத்து இருந்தார்: தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 11 May 2021 3:47 PM IST (Updated: 11 May 2021 3:47 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சாலையோரம் நடைபாதையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் பலி.

சென்னை கொத்தவால்சாவடி, எம்.கே.கார்டன் பகுதியில் சாலையோரம் நடைபாதையில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய மனைவி தேவி (வயது 50). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் நடைபாதையில் படுத்து தூங்கினர். அப்போது அந்த வழியாக தாறுமாறாக ஓடிவந்த கார், சாலையோரம் நடைபாதையில் படுத்து இருந்த தேவி மீது மோதியது. 

இதில் தலையில் படுகாயம் அடைந்த தேவியை அதே காரில் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர், தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காரில் வந்தது, அதே பகுதியைச் சேர்ந்த ராசி அசமது (30) என்பதும், திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தேவி மீது மோதியதும் தெரிந்தது. அவரிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story