கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகம்

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 11 May 2021 5:06 PM IST (Updated: 11 May 2021 5:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் கொரோனா இடைக்கால நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான டோக்கன் வினியோக பணி கும்மிடிப்பூண்டி தாலுகாவில் நேற்று துவங்கியது.

கும்மிடிப்பூண்டி,

தமிழக அரசின் கொரோனா இடைக்கால நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான டோக்கன் வினியோக பணி கும்மிடிப்பூண்டி தாலுகாவில் நேற்று துவங்கியது.

இதனையடுத்து கீழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இத்தகைய டோக்கன்களை வழங்கினார்.

அப்போது தாசில்தார் மகேஷ், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நோக்கில், கவரைப்பேட்டை, புதுவாயல் ஆகிய பகுதிகளில் வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், கிருமி நாசினி மற்றும் முகசவசம் போன்றவற்றை வழங்கினார்.

----

சென்னை பிட்

Next Story