ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர திருவள்ளூரில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சென்ற 2 லாரிகள்


ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர திருவள்ளூரில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சென்ற 2 லாரிகள்
x
தினத்தந்தி 13 May 2021 4:45 PM IST (Updated: 13 May 2021 4:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ந்தேதியில் இருந்து வருகின்ற 24-ந்தேதி வரை இரண்டு வார முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.இருப்பினும் தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக 2 மெடிக்கல் காலி லாரிகளை ஒரு சிறப்பு சரக்கு ரெயில் மூலம் ரெயில்வே நிர்வாகத்தினர் நேற்று அனுப்பி வைத்தனர். இந்த இரண்டு லாரிகளில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு 4 நாட்களில் மீண்டும் திருவள்ளூர் திரும்ப உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story