காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் பராமரிப்பற்ற குழந்தைகளுக்கு தங்கும் வசதி கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிகிச்சை பெறும் பெற்றோரின் பராமரிப்பற்ற குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய தங்கும் வசதி ஏற்படுத்தி ்தரப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் பராமரிப்பற்ற குழந்தைகளின் பட்டியல் சேகரித்து மாவட்டங்களிலும் உரிய உதவிகளை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறும் பெற்றோரின் குழந்தைகளை பராமரிக்க குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய தங்கும் வசதி ஏற்படுத்தி ்தரப்படும்.
தொடர்பு கொள்ள...
எனவே, மேற்படி உதவிகளுக்கு தொடர்பு கொள்ள குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098, (சைல்டு லைன்) மற்றும் குழந்தை நல குழு 044-27424816 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story