கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்
கம்பத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கம்பம்:
கம்பம் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதையடுத்து நகர் பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கம்பம் நகர்ப்புற சுகாதார நிலையம் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கம்பம் 4-வது வார்டு பகுதியான மாலையம்மாள்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முகாமிற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நடந்த முகாமில் காய்ச்சல், ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் முகாமிற்கு வந்தவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரம் சேகரிக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு, கொரோனா அறிகுறிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த முகாம் வருகிற 25-ந்தேதி வரை கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமையில் நகர்ப்புற மருத்துவர் வின்சென்ட் நல்லசுதன், சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story