2,600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


2,600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 15 May 2021 4:53 PM GMT (Updated: 15 May 2021 4:53 PM GMT)

வடகாடு அருகே 2,600 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

வடகாடு, மே.16-
வடகாடு அருகே 2,600 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. கீரனூரில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
 சாராய ஊறல்
ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசார் வடகாடு அருகே  கருக்காகுறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கருக்காகுறிச்சி தெற்கு தெரு, கிராமத்தில் உள்ள ஒரு புதர்கள் சூழ்ந்த வனப்பகுதியில் பேரல்களில் 2,600 லிட்டர் சாராய ஊறல் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, சாராய ஊறல்களை தரையில் ஊற்றி அழிக்க  உத்தரவிட்டார். பின்னர் அவைகள் அழிக்கப்பட்டன. காட்டுப்பகுதியில் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சாராய ஊறல்களை கண்டுபிடித்த மதுவிலக்கு போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கல்
கீரனூர் எழில் நகர் பகுதியில் ஒரு வீட்டுக்குள் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து கீரனூர் போலீசார் அந்த வீட்டில்  திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு 150 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதனையடுத்து அவைகளை பறிமுதல் செய்து, மதுபாட்டில்களை பதுக்கிய சுரேஷ்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர். மேலும் ரூ.19 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
மணமேல்குடி
மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் திருவப்பாவடி அத்தாணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து மது விற்ற அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story