குடிமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை
குடிமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை
குடிமங்கலம்
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரனோ பரவலைத்தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முழு ஊரடங்கு காரணமாக கடைகள் திறப்பு, மூடும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம் பெட்ரோல் பங்குகள், மருந்துக்கடை, நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
காய்கறி மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் குடிமங்கலம், திருப்பூர், கோவை மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story