12 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு சாவு
பாகல்கோட்டையில் 2 வாரத்தில் 12 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு சாவு
பெங்களூரு:
பாகல்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து பலியாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் தேவநாலாவில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் பாலரெட்டி (வயது 52) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் பாலரெட்டி பரிதாபமாக இறந்து விட்டார். இந்த ஆசிரியரையும் சேர்த்து பாகல்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 12 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது ஜமகண்டி தாலுகாவில் 3 பேர், குனகுந்த், முதோல் தாலுகாவில் தலா 2 ஆசிரியர்கள், பாகல்கோட்டை தாலுகாவில் 3 பேர், பாதாமி, பீலகி தாலுகாவில் தலா ஒருவர் என கடந்த 2 வாரத்தில் 12 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு உயிர் இழந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து பலியாவது கல்வித்துறைக்கு பெரும் இழப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story