ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி


ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி
x
தினத்தந்தி 16 May 2021 3:08 PM IST (Updated: 16 May 2021 3:08 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

சென்னையை அடுத்த ஆலந்தூர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியை பொதுமக்களுக்கு தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்களான சானிடைசர், முக கவசம், சோப்பு ஆகியவற்றையும் வழங்கினார். இதில் முன்னாள் கவுன்சிலர்கள் 
பி.குணாளன், கே.பி.முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம், செம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரனை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், முடிச்சூர், திருவஞ்சேரி, அகரம் தென், மதுரபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா வழங்கினார். தாம்பரம் நகர முன்னாள் துணைத் தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வழங்கினார்.

Next Story