கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு உணவு வழங்கிய எம்.எல்.ஏ.


கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு உணவு வழங்கிய எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 16 May 2021 3:48 PM IST (Updated: 16 May 2021 3:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தை அருகே நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் தி.மு.க.எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.

அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story