காஞ்சீபுரத்தில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை


காஞ்சீபுரத்தில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை
x
தினத்தந்தி 16 May 2021 4:28 PM IST (Updated: 16 May 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி காஞ்சீபுரம் வளத்தீஸ்வரன் கோவில் தெரு கூட்டுறவு நியாய விலை கடையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கொரோனா தொற்று நிவாரணத் தொகையாக அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் முதல் தவணை உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.பி.ஜி.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் பா.லோகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, துணை பதிவாளர் சரோஜா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் முரளி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் பணியை உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர் தொடங்கி வைத்தார். விழாவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி செயலாளர் பாரி வள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story