மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு


மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 16 May 2021 6:58 PM IST (Updated: 16 May 2021 6:58 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குடிசைமாற்று வாரிய மேலாண்மை இயக்குனருமான கிர்லோஷ்குமார் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றானது சமூக பரவலாக மாறாமல் இருக்க மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு வரும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

முழு ஒத்துழைப்பு

கைகளை கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். மேலும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, திட்ட இயக்குனர் தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், சுகாதார துணை இயக்குனர் கீதா, உதவி கலெக்டர்கள் பாலச்சந்திரன், அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தபட்ட வார்டினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் பார்வையிட்டார். அப்போது நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
1 More update

Next Story