சீர்காழியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினார்
சீர்காழியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை அரசு சார்பில் பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சீர்காழி,
சீர்காழி அருகே அரசு சார்பில் நிம்மேலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சார்பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சீர்காழி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி, மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் சத்தியசீலன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அத்தியூர், மருதங்குடி, நிம்மேலி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 589 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம், ஆக மொத்தம் ரூ.11 லட்சத்து 78 ஆயிரம் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அன்பழகன், மாவட்ட நிர்வாகி முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கரபாண்டியன், தட்சணாமூர்த்தி, சுந்தர்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் சசிகுமார், கூட்டு சங்க உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
முன்னதாக பொதுமக்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி தரமாக வழங்க வேண்டும் எனவும், சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி நகரத்திற்கு உட்பட்ட தாடாளன் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் கட்சி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க செயலாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவெண்காடு
தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தபடி நிவாரண உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி மணி கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முல்லை வேந்தன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி இயக்குனர் அப்துல்ரஹீம், ஊராட்சி துணை தலைவர் சகாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கி செயலாளர் ஜோதி வரவேற்றார். இதில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் கலந்துகொண்டு நிவாரண உதவி தொகை வழங்கி பேசினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் செல்வம் பிள்ளை, சின்னையன், வைகோ அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பூம்புகார் மீனவர் காலனியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான சசிகுமார் கலந்து கொண்டு நிவாரண தொகையை வழங்கினார். இதில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரவி, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் பாலசுந்தரம், கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.
குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சியில் கொரோனா தொற்று நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story