நாமக்கல் அருகே 282 மதுபாட்டில்கள் பறிமுதல்
நாமக்கல் அருகே 282 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள முத்துகாப்பட்டி ஊராட்சியில் ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய மதுபாட்டில்களை வாங்கி சிலர் பதுக்கி வைத்து இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜேஸ் மாவட்ட கலெக்டர் மெகராஜுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார்.
அதன் அடிப்படையில் நேற்று மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமு மேற்பார்வையில் நாமக்கல் மதுவிலக்கு போலீசார் முத்துகாப்பட்டியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் அதிக விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 282 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பதுக்கி வைத்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story