நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் மூதாட்டிகளிடம் நகைபறித்த 2 வாலிபர்கள் கைது

நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் மூதாட்டிகளிடம் நகைபறித்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 May 2021 6:07 PM GMT (Updated: 16 May 2021 6:07 PM GMT)

நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் மூதாட்டிகளிடம் நகைபறித்த 2 வாலிபர்கள் கைது

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்த ஜருகு மற்றும் மலையூர்காடு பகுதியை சேர்ந்தவர்கள் மாதம்மாள் (வயது 60), மற்றொரு மாதம்மாள் (55). இவர்கள் ஜருகு மற்றும் மலையூர்காடு வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தனர். அப்போது மூதாட்டிகளை நோட்டமிட்ட மர்மநபர்கள் 2 பேரையும் தாக்கி அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்று விட்டனர். 
இதுகுறித்து அவர்கள் தொப்பூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். இதையடுத்து மூதாட்டிகளிடம் நகைபறித்தது ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சுரேஷ் (22) மற்றும் அழகேசன் (21) என தெரியவந்தது. இதையடுத்து நேற்று வாலிபர்கள் 2 பேரையும் தொப்பூர் போலீசார் கைது செய்தனர்.
=======

Next Story