முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைப்பு
முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன
புதுக்கோட்டை
கொரோனா 2-வது அலையின் பரவலை தடுக்க தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. 10 மணிக்கு பிறகு கடைகளை அடைக்கவும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகும். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அத்தியாவசியமான பால், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அம்மா உணவகங்கள் திறந்திருந்தன. ஒரு சில ஓட்டல்கள் குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்திருந்தன. ஏற்கனவே அறிவித்தபடி பஸ்களும் இயக்கப்படவில்லை. ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. அத்தியாவசிய தேவைகளுக்கு இருசக்கர வாகனங்களில் வெளியில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Tags :
Next Story