திருச்சி சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு


திருச்சி சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2021 8:40 PM GMT (Updated: 16 May 2021 8:40 PM GMT)

திருச்சி சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு மேற்கொண்டார்

இலுப்பூர்
ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். அந்தவகையில் இலுப்பூரில், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு, இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் முழு ஊரடங்கு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு மேற்கொண்டார். அப்போது இலுப்பூர் வழியாக வந்த அவர் திடீரென ஜீப்பை நிறுத்தி அங்கிருந்த போலீசாரிடம் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகளை எடுத்துக் கூறினார். பின்னர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.Next Story