கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரம் வழங்கிய சிறுவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரம் வழங்கிய சிறுவர்கள்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகன்கள் மிதுன் (வயது 8), மித்ரன் (6). இவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பெற்றோர், உறவினர் கொடுக்கும் பணத்தை செலவு செய்யாமல் சேர்த்து வந்தனர். இந்த பணத்தை கொண்டு் பொம்மை ரேஸ் கார் வாங்க திட்டமிட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டும் சிலர் இறந்தும் வருகின்றனர். இதனை அறிந்த சிறுவர்கள் தாம் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்க தமது பெற்றோரிடம் கேட்டனர்
அதன்படி நேற்று சிறுவன் மிதுனின் பிறந்தநாள் என்பதால் மிதுன், மித்ரன் இருவரையும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிசிடம் அழைத்து சென்றனர். அங்கு சிறுவர்கள் இருவரும் ரேஸ் கார் வாங்க வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் முககவசங்களை கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதியாக முதல்-அமைச்சருக்கு அனுப்பும்படி கொடுத்தனர்.
சிறுவர்களின் செயலை கலெக்டர் ஜான்லூயிஸ் பாராட்டி அவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story