திருமக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
திருமக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது.
திருமக்கோட்டை,
திருமக்கோட்டை சோத்திரியம் கிராமம் அருகே உள்ள மலட்டு ஏரியில் சாராயம் காய்ச்சப்படுவதாக திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருமக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது ஏரிக்கரையில் 300 லிட்டர் சாராய ஊறல் போட்டு இருந்ததை கண்ட போலீசார் அதனை கைப்பற்றி அழித்தனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சோத்திரியம் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ்(வயது40), வீரசேகர் (47்) ஆகியோர் என்பதும், சாராயம் காய்ச்சியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story