கீழ்வேளூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்


கீழ்வேளூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 17 May 2021 4:13 PM IST (Updated: 17 May 2021 4:13 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்.

சிக்கல்,

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடியில் அம்மா மினி கிளினிக் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் சிகார், கூரத்தாங்குடி ஊராட்சிகளை சேர்ந்த 22 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கு தேவூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மருத்துவதுறை பணியாளர்கள், நாகை ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் குமார், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா. தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலகிருஷ்ணன், தெய்வானை, ஊராட்சி செயலாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் வேளாங்கண்ணி பேரூராட்சியில் ஆரிய நாட்டு தெரு மீனவர் சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரும், கீழையூர் ஒன்றிய மண்டல அலுவலருமான சங்கர் தொடங்கி வைத்தார். இதில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், செந்தில். திருப்பூண்டி மருத்துவ அலுவலர் அரவிந்தன். பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பிரதாபராமபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Next Story