முழு ஊரடங்கு அமல்: அதிராம்பட்டினத்தில், 2 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
அதிராம்பட்டினத்தில் முழு ஊரடங்கு காரணமாக 2 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்க மீன்பிடிக்க செல்லவில்லை.
அதிராம்பட்டினம்,
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வந்தது. கடல் சீற்றமும் இருந்தது. இதனால் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் காற்றின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் உடனடியாக கரை திரும்பினர்.
கடலுக்கு செல்லவில்லை
இந்த நிலையில் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மீன், இறைச்சி கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அதிராம்பட்டினத்தில் அனைத்து துறைமுகங்களும், மார்க்கெட் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Tags :
Next Story