378 பேருக்கு கொரோனா


378 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 May 2021 3:50 PM GMT (Updated: 2021-05-19T21:20:42+05:30)

378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 378 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 13 ஆயிரத்து 66 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 197 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 10 ஆயிரத்து 153 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2 ஆயிரத்து 761 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 152 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 69 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story