முத்தூரில் சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பு


முத்தூரில் சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 19 May 2021 4:38 PM GMT (Updated: 19 May 2021 4:38 PM GMT)

முத்தூரில் சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பு

முத்தூர்
முத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர, கிராம பகுதிகளில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவுதல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி முத்தூர் பஸ் நிலையம், கடைவீதி, வெள்ளகோவில் சாலை, ஈரோடு சாலை, காங்கேயம் சாலை, கொடுமுடி சாலை ஆகிய பகுதிகளில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் தற்போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்து வரும் அங்காடிகளான மருந்து கடைகள், பால் கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகிய மக்கள் நடமாட்டம் உள்ள சாலை முன்புற பகுதிகளில் நேற்று காலை பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக வாகனங்களில் ராட்சத குடிநீர் தொட்டிகளில் கிருமிநாசினி மருந்துகள் நிரப்பப்பட்டு மின் மோட்டார் வைத்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் தெளிக்கப்பட்டன. மேலும் இந்த கடைகள் முன்புறம் பொதுமக்கள் தனித் தனியாக நின்று பொருட்கள் வாங்கி செல்ல ஏதுவாக பிளீச்சிங் பவுடர் மூலம் வட்ட கோடுகள் இடப்பட்டன. இந்த பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story