ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று


ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 19 May 2021 5:28 PM GMT (Updated: 2021-05-19T22:58:53+05:30)

ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொண்டி, 
திருவாடானை தாலுகா பாண்டுகுடி அருகே உள்ள அரியப்புவயல் கிராமத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியை கட்டுப்பாடு பகுதியாக அறிவித்த அதிகாரிகள் அங்கு தடுப்பு வேலிகளை அமைத்தனர். மேலும் மருத்துவ குழுவினரால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப் பட்டது. இதனை திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார ஆய்வாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story