திருட வந்த விடுதியில் உறங்கிய மர்மநபர்கள்


திருட வந்த விடுதியில் உறங்கிய மர்மநபர்கள்
x
தினத்தந்தி 20 May 2021 12:48 AM IST (Updated: 20 May 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

இட்டமொழியில் திருட வந்த விடுதியில் மர்மநபர்கள் உறங்கிச் சென்றனர்.

இட்டமொழி, மே:
இட்டமொழியில் ஒரு பள்ளி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் மகளிர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதிக்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து, அங்குள்ள அறைகளை திறந்து பொருட்களை திருட முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் இருந்த அறைக்குள் புகுந்து அங்கிருந்த எண்ணெய் பாக்கெட்டுகளை திருடினார்கள். பின்னர் இரவு முழுவதும் அங்குள்ள ஒரு அறையில், மின்விசிறி, செல்போன் சார்ஜர் போட்டு உறங்கிவிட்டு காலையில் தப்பிச் சென்றனர்.
நேற்று காலையில் விடுதி அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு, திறந்து கிடப்பதை அறிந்த விடுதி வார்டன் வாசுகி இதுகுறித்து உடனடியாக திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story