தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2021 7:39 PM GMT (Updated: 2021-05-20T01:09:03+05:30)

சிவகாசியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
சிவகாசி மீனம்பட்டி திடீர் காலனியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 51). இவரது மனைவி விஜயலட்சுமி (48). இவர்கள் இருவரும் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் ராயப்பனுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு பெரும் பாதிப்பு அடைந்துள்ளார். இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோய் கொடுமையால் அதிக உடல்வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராயப்பன் இப்படி நோயுடன் இருப் பதை விட இறந்துவிடலாம் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். அவரை மனைவி விஜயலட்சுமி சமாதானம் செய்து வந்துள் ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story