காஞ்சி சங்கர மடம் சார்பில் கொரோனா நிவாரண நிதி ரூ.25 லட்சம்


காஞ்சி சங்கர மடம் சார்பில் கொரோனா நிவாரண நிதி ரூ.25 லட்சம்
x
தினத்தந்தி 20 May 2021 10:52 AM IST (Updated: 20 May 2021 10:52 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சி சங்கர மடம் சார்பில் கொரோனா நிவாரண நிதி ரூ.25 லட்சம் வழங்கினார்.

காஞ்சீபுரம், 

கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு்கொண்டார். இதையொட்டி பல்வேறு தனியார் நிறுவனங்கள், சமூக அறக்கட்டளையினர், தன்னார்வலர்கள், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தாங்களின் சேமிப்பு பணம் என பலரும் தங்களால் இயன்ற நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடம் சார்பில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளையின் மூலமாக ரூ.25 லட்சத்தை வழங்கினார்.

அதனை காஞ்சி காமகோடி பீடம் மேலாளர் என். சுந்தரேசன், அறக்கட்டளை அறங்காவலர்கள் டி.எஸ். ராகவன், டி.ஆர். ராஜகோபாலன், விசுவநாதன் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.

கொரோனா தொற்று விரைவில் அகலவும், இயல்புநிலை திரும்பவும் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடைய பிரார்த்தனையும் அருளாசியும் முதல்-அமைச்சரிடம் தெரிவித்ததாக காஞ்சி சங்கர மடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story