மண்ணிவாக்கம் ஊராட்சியில் திட்ட இயக்குனர் ஆய்வு


மண்ணிவாக்கம் ஊராட்சியில் திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2021 11:10 AM GMT (Updated: 2021-05-20T16:40:54+05:30)

மண்ணிவாக்கம் ஊராட்சியில் திட்ட இயக்குனர் ஆய்வு.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், சளி, இருதய நோய், சிறுநீரக நோய், மூச்சுத்திணறல் உள்ளதா? என்றும் தடுப்பூசி போட்ட விவரங்களையும் கணக்கெடுத்து ஆய்வு செய்தனர்.

இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஹரி கிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோஜ்குமார், சரவணன், மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story