சூதாட்டம்; 27 பேர் கைது


சூதாட்டம்; 27 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2021 11:46 PM IST (Updated: 20 May 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறி ஓட்டலில் சூதாட்டம் 27 பேர் கைது

பெங்களூரு:

பெங்களூரு அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஊரடங்கு மத்தியிலும் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, அந்த ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஓட்டலின் 5-வது மாடியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் 27 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதையடுத்து, 27 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். ஊரடங்கின் போதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓல்டு மெட்ராஸ் ரோட்டுக்கு வந்து, அந்த ஓட்டலில் பணம் வைத்து 27 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

கைதான 27 பேரிடமும் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அல்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story