மர்மநோய் தாக்கி ஆடுகள் சாவு: ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு


மர்மநோய் தாக்கி ஆடுகள் சாவு: ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
x

மருகுளம் பகுதியில் மர்மநோய் ஆடுகள் இறந்த சம்பவம் தொடர்பாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இட்டமொழி, மே:
நாங்குநேரி யூனியன் மருதகுளம் அருகே உள்ள கோவைகுளம், பனையன்குளம் பகுதிகளில் மர்ம நோய் தாக்கி பல ஆடுகள் இறந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் நேற்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட ஆட்டு கிடைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தனது சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து, ராணிப்பேட்டைக்கு சென்று தடுப்பூசி பெற்று அனைத்து ஆடுகளுக்கும் போட நடவடிக்கை எடுத்தார். மேலும் நோயுற்ற ஆடுகளில் இருந்து ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.
முன்னதாக மருதகுளத்தில் பொதுமக்களுக்கு வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம், கபசுர குடிநீர் வழங்கும் முகாமை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதில் அம்பை கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஆபிரகாம் ஜாப்ரி ஞானராஜ், கால்நடை நோய் தொற்று ஆய்வு உதவி இயக்குனர் ஜான்சுபாஷ், கால்நடை டாக்டர் மாரியப்பன், நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், தாசில்தார் இசக்கிபாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னுலட்சுமி, சாந்தி, டாக்டர்கள் கற்பகஜோதி, வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. களக்காடு பெல்ஜியம் அரசு மருத்துவமனை, ஜே.ஜே.நகர் ஆகியவற்றில் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கினார்.

Next Story